முல்லைத்தீவில் புலிகளின் சீருடை, கொடி? உண்மை நிலவரம் என்ன?

0

புலிக்கொடி, கிளைமோர் குண்டுடன் முல்லைத்தீவில் ஒருவர் கைது! இருவர் தப்பி ஓட்டம் என்ற செய்திகள் இலங்கை இணையத்தள ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா காவல்துறை கூறியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் தப்பி ஓடியுள்ள நிலையில், கைதானவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தப்பி ஓடிய இருவர்களில் ஒருவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று காலை வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போதே இக் கிளைமோர் குண்டு மற்றும் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவல்துறை கூறுகிறது.

இருப்பினும் விசாரணைகள் நடப்பதனால் எதனையும் கூறமுடியாது என ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப்புலிகளின் கொடி- சீருடையுடன் மேலும் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலை புலிகளின் சீருடைகள், கொடிகள் மற்றும் 98 T 56 ரக துப்பாக்கி ரவைகள் ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீண்டும் காவல்துறை அறிவித்துள்ளது.

இராணுவத்தினர் தொடர்ந்தும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது தப்பிச்சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மற்றையவரையும் கைது செய்யும் பொருட்டு தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் கூறுகிறது காவல்துறை.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியிலிருந்து 20 கிலோ கிலைமோர் குண்டு 1, கைக்குண்டு 1, விடுதலை புலிகளின் சீருடை 2, 98 T 56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் புலி கொடிகள் 30 க்கு மேற்பட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொலிஸா0ர் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மை நிலவரம் என்ன?

உண்மையிலேயே மீண்டும் விடுதலைப் புலிகள் களத்திற்கு வந்துவிட்டனரா? அல்லது சிங்கள அரசே இவ்வாறு ஒரு புலி நாடகத்தை அரங்கேற்றுகிறதா என்பதே இன்றைய ஈழ மக்களின் குழப்பம்.


இலங்கை அரசு தனக்கு சில அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைத் தேடவும் ஈழ மக்களை தொடர்ந்தும் இராணுவ முனையில் வைத்திருக்கவுமே இவ்வாறு நாடகம் செய்வதாக நம்பத்தகு கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தளவாடங்களை வைத்து தமது ஆட்கள் சிலரையும் வைத்து இந்த நாடகம் ஆடப்படுவதாகவும் தமிழர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.