முல்லைத்தீவு வீதியில் கிடக்கும் சிங்கள இராணுவத்தின் விபரங்கள்!

0

5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் இரகசிய விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை முள்ளியவளை பிரதான வீதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆவணங்கள் தற்பொழுது வரை முள்ளியவளை பிரதான வீதியோரத்தில் காணப்படுவதாக போக்குவரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் இடம்விட்டு இடம் மாறும் சந்தர்ப்பத்தில் இதை தவற விட்டிருக்காலாம் என்று கருதப்படுகின்றது.மேலும் குறித்த ஆவணங்களில் இலங்கை இராணுவப் படைப் பிரிவுகளில் விபரங்களும், அதில் முக்கிய பதவி நிலையில் கடமையாற்றிய(றும்) இராணுவ அதிகரிகளின் பெயர் விபரங்கள், அவர்கள் பிறந்த திகதி, இராணுவத்தில் இணைந்த காலங்கள் மற்றும் அவர்களின் சேவை முடிவு காலங்கள் போன்ற முக்கிய இராணுவ இரகசிய விடயங்கள் அதில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இராணுவ சிறப்பு படையணியில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார் என்றும் அவர் 1976 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்தார் என்பதுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி 55வயதில் இராணுவ சேவையை தொடர்ந்தார் என்றும் அதில் பதியப்பட்டுள்ளது.

மேலும் ஓரு இராணுவ அதிகாரி 1966 ஆம் ஆண்டு பிறந்தார் என்றும் அவர் 1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்தார் என்றும் அவரின் சேவைக்காலம் 2021ஆம் ஆண்டு வரை தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள 5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் விபரங்கள் அதில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.