மைத்திரியின் செவிகளுக்கு எட்டுமா இக் குழந்தைகளின் குரல்கள்?

கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்! ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்!

0

கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும்! ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்!

எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக்கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.அதிலும் சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள் எனவும், எனவே தங்களின் நிலைமையினை கருத்தில் எடுத்து ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர் அச்சிறுவர்கள்.

கடந்த சில மாதங்களின் முன்னர் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவி இறந்தார். இதனையடுத்து அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சுதாகருக்கு 3 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டன. தாயை இழந்த நிலையில் சுதாகரனின் மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய காட்சி அனைவரையும் உருக்கியது. அத்துடன் தமது தந்தையை விடுவிக்குமாறும் இரு பிள்ளைகளும் கோரிக்கை விடுத்தனர். எனினும் மைத்திரி கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையிலேயே தற்போது மைத்திரி கிளிநொச்சி வருகின்றார். இதனையடுத்து, அம்மாவை இழந்து அப்பாவை பிரிந்து நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் ஜனாதிபதி மாமா உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.