சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மாநாடு இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சிறுவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதாரம், கல்வி, உளவள ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு விடயங்களினூடாக மாணவர்களை திடகாத்திரப்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது