யாழில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு மோதல்!பொலிஸார் துப்பாக்கி சூடு !ஒருவர் பலி

0

யாழ்ப்பாணத்தில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இடம்பெற்ற இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையிலான வாள் வெட்டு மோதலின் போதே இந்த இளைஞர் பலியாகியுள்ளார்.

ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர் குழுக்கள் வாள்களுடன் சண்டை பிடித்துள்ளனர் .இந்த வாள்சண்டையில் மல்லாகத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை நிறுத்தும் பொருட்டு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டினால் சுன்னாகம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது .இந்த குழுமோதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு கலாச்சாரம் முளை விடுகின்றதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது .

Update :-

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சேர்ந்த 4534 என்ற இலக்கமுடைய பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.பொலிஸாரின் துப்பாக்கி சூட்டினால் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.ஆலய பெருநாளில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.