யாழில் பதற்றம் ! இரவோடு இரவாக 15 பேர் கைது

0

நேற்று இரவு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழுமோதலில் ஈடுபட்டமையே கைதிற்க்கான கரணம் என்று அறியமுடிகின்றது .

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் விளையாட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது . இதன் போது இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது.

இரண்டு குழுக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி, மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நிறுத்தினார்கள் . அவர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை முடுக்கி விட்ட பொலிஸார் குழுமோதலில் ஈடுபட்ட 15 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.இம்மோதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.