யாழ்ப்பாணத்தினை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது .கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயது மதிக்கத்தக்க இந்த யுவதி கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார் .இவர் கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக வேலை செய்து வருகின்றார் .நேற்று இந்த யுவதி வேலை செய்யும் வீட்டினுள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் அவரை கத்தியினால் கழுத்தில் வெட்டி கொலைசெய்துள்ளார்கள் .
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் .கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கோப்பாய் மற்றும் கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.