யாழ்ப்பாணத்தில் நடந்த உலக யோகா தினம்

0

ஜூன் 21 ம் திகதி உலக யோகா தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது .இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியினால் 2015 ஆண்டும் முதல் ஜூன் 21 உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டது .

நான்காவது யோகா தினம் இன்றாகும் .இம்முறை யாழ்ப்பாணத்திலும் யோகா தினம் கொண்டாடப்பட்டுள்ளது .யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டுள்ளது .

இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.