யாழ்ப்பாணத்தில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 30 வயது முரட்டு ஆசாமி

0

யாழ்ப்பாணத்தில் 16 வயதுடைய சிறுமியொருவரை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது .யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வசிக்கும் சிறுமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் .

சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞர் ஒருவரே சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி கொடிகாமம், குடமியன் பகுதியில் வசித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது .

தனது கர்ப்பத்துக்கு காரணம் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞர் தான் என்று சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார் .இதன் அடிப்படையில் குறித்த இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

விடுதலை புலிகளின் காலத்தில் யாழ்ப்பாணம் மிகவும் கட்டுக் கோப்புடையதாக இருந்து வந்தது .விடுதலைப்புலிகள் இன்று இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம் சீரழிந்து காணப்படுகின்றது .இளைஞர் யுவதிகள் திசை மாறி பயணிக்கும் நிலை காணப்படுகின்றது .யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை குறித்து சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலை கொண்டுள்ளார்கள் .புலிகள் மீண்டும் வந்தால் தான் யாழ்ப்பாணம் பழைய நிலைக்கு திரும்பும் என்று ஆதங்கப்படுகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.