யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி மற்றும் கோட்டையினுள் இராணுவம் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்று யாழ் மாநகரசபை மேயர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார் .
நேற்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டேரிஸ்க்கும் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது .இதன் போது ,யாழ்ப்பணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை யாழ்ப்பாணம் நகரில் உள்ள கோட்டைப் பகுதியில் அமர்த்துவது தொடர்பில் எமது நிலைப்பாடு என்ன என்று பிரித்தானிய தூதுவர் வினாவியிருந்தார் .
தூதுவரின் கேள்விக்கு பதிலளித்த ஆனோல்ட் ,யாழ்ப்பான நகரத்துக்குள்ளே அல்லது யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியிலோ இராணுவத்தை அனுமதிக்க முடியாது. இராணுவத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றோம் என்று தெரிவித்தார் .
மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது . யாழ் மாநகர அபிவிருத்திக்கு பிரிட்டனின் பங்களிப்பினை மேயர் கோரியுள்ளார் .