யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 37ம் ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நூலகம் முன் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் நூலக முன்றலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.