யோகி ஆதித்யாநாத் பிறந்தநாள் – மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் வாழ்த்து

0

உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் 46-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோரக்நாத் மடத்தின் மடாதிபதியாக இருந்த யோகி ஆதித்யாநாத், கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற யோகி ஆதித்யாநாத், சட்ட மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று யோகி ஆதித்யாநாத் 46-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘கடின உழைப்பாளியான எனது அன்புக்குரிய உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தனது அயராத முயற்சியால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மேம்பாட்டுக்கு அவர் பாடுபட்டு வருகிறார். மக்கள் தொண்டாற்ற அவர் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.