ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்!இருவர் பலி!அசண்டையீனமே காரணம்

0

ரயில் கடவையில் ரயில் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர் .இந்தக் கோர விபத்து நேற்றுமாலை ராகம, பேரலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது .

சிலாபத்தில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளை ரயில் பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருந்ததாகவும் அசண்டையீனமாக பாதுகாப்பு கடவையை கடக்க முயற்சித்த வேளையிலேயே இந்த கொடூரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது .இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர் .

விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்டுகின்றது .

 

Leave A Reply

Your email address will not be published.