வடக்கு மாகாணத்தின் முதல்வராக தான் பதவியேற்றால் வடக்கு மாகாணத்தில் பாலாறும் தேனாறும் ஓட வைப்பேன் என்று அரச ஒட்டுக்குழுவான ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
இந்த வருடம் முடிவடைவதற்குள் அடுத்த மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்க படுகின்றது .இடம்பெற இருக்கும் அடுத்த மாகாண சபை தேர்தலில் டக்ளஸ் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .வடக்கு மாகாணத்தின் அடுத்த முதல்வராக வரும் கனவில் மிதக்கின்றார் டக்ளஸ் தேவானந்தா .
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ள டக்ளஸ் இது குறித்து தெரிவித்த போது, நான் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வந்தால் மூன்று வருடங்களுக்குள் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்து பாலாறும் தேனாறும் ஓட வைப்பேன் என்று தெரிவித்தார் .
அன்று தொடக்கம் இலங்கை அரசில் பங்காளியாக இருந்து வரும் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கடத்தி கொலை செய்து இரத்த ஆறு ஓட வைத்தமையை தமிழர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் .அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமிழினத்தை பேரினவாதிகளிடம் கூட்டி கொடுத்த டக்ளஸ் வடக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் முதலமைச்சராக வர நினைப்பது வேடிக்கையிலும் வேடிக்கை .
அமைச்சராக டக்ளஸ் இருந்த போது ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தமை மறுப்பதற்கில்லை .ஆனால் தகுதி உள்ளோர் வெளியில் இருக்க தகுதியற்றோருக்கு வேலைகளை கொடுத்து சமூக முறைமையை சீரழித்தது டக்ளஸ் தான் என்பது உண்மை .