வடக்கு முதல்வர் பதவிக்கு கூட்டமைப்பு வேட்பாளர் இமானுவேல் அடிகளாரா?

சிங்கள அமைச்சர் பரிந்துரை

0

வடமாகாணசபையின் அடுத்த முதல்வர் யாரென்பது தொடர்பில் ஊகங்கள் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை அரசு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளாரை முன்னிறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அரசு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளாரை முன்னிறுத்த கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வடமாகாணசபையின் அடுத்து முதலமைச்சர் தெரிவில் முன்னணியில் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனேயுள்ளார்.

மறுபுறம் அவர் தனித்து செல்வாரா அல்லது கூட்டமைப்பின் பட்டியலில் செல்வாரா என்பது பில்லியன்களில் பெறுமதியான கேள்வியாக உள்ளது. தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசா அடுத்த முதலமைச்சர் கதிரைக்கு தனது பெயரை பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்ற போதும் அவர் விக்கினேஸ்வரனுடன் போட்டிபோடும் வலுவில் இல்லையென்பதே சுமந்திரனின் நிலைப்பாடாக உள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு போட்டியாக முன்னிறுத்த பலம் வாய்ந்த எவருமற்ற நிலையில் தனது முகவர்கள் ஊடகங்கள் ஊடாக நாளுக்கொரு பெயர்பட்டியலை சுமந்திரன் அவிழ்த்துவருகின்றார்.

இந்நிலையில் இறுதியாக வடமாகாணசபை பிரதம செயலாளர் பத்திநாதனின் பெயரை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

எனினும் இதனை அதிசயமாக சக அலுவலர்களிடையே பத்திநாதன் பகிர்ந்துள்ளார் என்பது இன்னொரு சுவையான கதையாகவேயுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அரசின் பலமிக்கவரான அமைச்சர் மங்கள சமரவீர நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளாரது பெயரை முன்னிறுத்தியுள்ளார்.வேடிக்கையென்னவெனில் இந்திய அரசும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் அடிகளாரை முன்னிறுத்தும் முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளமையாகும்.

இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பில் தற்போதைய அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் வடக்கில் கத்தோலிக்கர்களது ஆதிக்கம் அதிகரிப்பதாக இந்து அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கவண்ணம் தாம் கையாள்வதாக யாழிலுள்ள இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் அரசிற்கு உறுதியளித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.