வவுனியா கூமாங்குளம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று பிற்பகல் 2மணியளவில் கைவிடப்பட்ட வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சல்லடைபோட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக தகவல் கிடைத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கிருந்தவர்கள் செய்தி சேகரிக்கத்தடை ஏற்படுத்தியதுடன் அவ்வீட்டினை துப்பரவுப்பணிகள் இடம்பெற்று வருகின்றதே தவிர அங்கு வெடிபொருட்கள் எவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அண்மையில் விசேட அதிரடிப்படையினர் சென்று நீதிமன்றத்துடன் அனுமதியைப் பெற்று அகழ்வுப்பணியினை மேற்கொண்டபோதிலும் எவ்விதமான வெடிபொருட்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.