முட்டைகளை விழுங்கிய பாம்பு மீண்டும் வாயில் இருந்து வெளியில் கக்கிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது .
கர்நாடகாவில் உள்ள வீடொன்றில் புகுந்து அங்கிருந்த 10 ற்கும் மேற்பட்ட முட்டைகளை விழுங்கிய பாம்பு அந்த வீட்டில் பதுங்கி இருந்துள்ளது .முட்டைகளை காணாமல் தேடிய வீட்டின் உரிமையாளர் பாம்பு பதுங்கியிருப்பதை பார்த்துள்ளார் .இது குறித்து பாம்பு பிடிப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர் தகவல் கொடுக்க அவர்கள் வந்து பாம்பினை வீட்டினில் இருந்து வெளியே எடுத்துள்ளனர் .அதன் போது விழுங்கிய முட்டைகளை பாம்பு ஒவ்வொன்றாக வெளியே கக்கியது .இதனை ஊர் மக்கள் வியப்புடன் பார்த்துள்ளனர் .