விவசாயிகளுக்கும் தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம் – சூர்யா

0

கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிப்பதாக கூறினார். #KadaikuttySingam #Karthi

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சூரி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிவக்குமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, பாண்டிராஜ், ஜான் விஜய், ஸ்ரீமன், பானுப்ரியா, திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நன்றி தெரிவித்து பேசியதாவது,

இந்த மாதிரியான கதையை மக்களுக்கு கொண்டு சொல்ல வேண்டும் என்று முயற்சியில் எடுக்கப்பட்ட படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் நடித்துள்ள பலரும் அவர்களது உணர்ச்சியையே கதாபாத்திரத்தில் பிரதிபலித்திருக்கின்றனர். உறவுகளுக்கு மருந்தளிக்கும் படமாக கடைக்குட்டி சிங்கம் நிச்சயமாக இருக்கும். பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம். உறவுகளை மீண்டும் புதுப்பிக்க, பலம் சேர்க்கும் படமாக நிச்சமாக அமையும் என்றார்.

நடிகர் கார்த்தி பேசும் போது, இயக்குநர் பாண்டிராஜ், படத்தில் மட்டும் விவசாயத்தை உட்புகுத்தாமல், சென்னையிலேயே ஒரு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்த படத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அனைவருக்கும் வித்தியாசமான கதபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். பட்டணத்திற்கு பிழைக்க சென்றவர்களை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கும் படம் தான் இது. அதேபோல் சொந்த பந்தங்கள் அழிந்து வருகிறது. சொந்தங்களை நியாபகப்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றார்.

படத்தில் தனது கதாபாத்திரம் என்னவோ, அதுவாகவே வந்து சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார். #KadaikuttySingam #Karthi

Leave A Reply

Your email address will not be published.