வீடுகளின் கூரைகளை பிடுங்கி எறிந்த மைத்திரி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்குவானூர்தியினால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த சம்பவம் ஊவா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது .

ஊவா மாகாணத்தில் உள்ள ஹாலிஎல என்னும் நகரத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண அலுவலகம் மற்றும் வள மத்திய நிலையம் என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது .இதனை திறப்பதற்காக மைத்திரி உலங்குவானூர்தியில் வருகை தந்தார் .இதன் போது மைத்திரி பயணித்த உலங்கு வானூர்தி தரையிறங்கும் போது ஏற்படுத்திய கடும் காற்று காரணமாக அருகில் இருந்த வீடுகளின் கூரைகள் பிடுங்கப்பட்டு காற்றில் பறந்துள்ளன.இதனால் வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது .

மேலும் , மைத்திரி பயணித்த உலங்கு வானூர்தி தரையிறங்கிய மைதானத்துக்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருந்து நிலையம் ஒன்றின் கூரையும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக மருந்து நிலையத்தின் வைத்தியர் லலிதா ரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.