ஆலய தேர்ப் பவனியின் போது சொரூபம் வீழ்ந்து நொறுங்கிய சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது .நேற்றைய தினம் மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் தேர்ப் பவனி இடம்பெற்றது .இதன் போது எதிர்பாராத விதமாக சொரூபம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .இந்த சம்பவம் தேர் பவனியில் கலந்து கொண்ட பக்தர்களை அழ வைத்துள்ளது .
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேரில் அந்தோனியார் மற்றும் குழந்தை யேசுவின் சொரூபம் என்பன எடுத்து வரப்பட்ட போது ஆலயத்தின் பிரதான வாயில் ஊடாகத் தேர் உள்நுழையும் போதே அந்தோனியார் மற்றும் குழந்தை யேசுவின் சொரூபங்கள் வீழ்ந்து உடைந்துள்ளன.
தேர் பவனி வந்த வீதியில் உள்ள இறக்கம் காரணமாகவே தேர் சரிந்துள்ளது .இதன் காரணமாகவே சொரூபம் வீழ்ந்து உடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து ஆலயத்தினுள் இருந்த மற்றொரு சொரூபம் கொண்டுவரப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டு தேர் பவனி இடம்பெற்றது .எனிலும் சொரூபம் வீழ்ந்து உடைந்ததால் பக்தர்கள் பெரும் சோகத்துடனேயே காணப்பட்டனர் .