13 வயது பாடலை செல்லும் சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது காமக்கொடூரன்

0

13 வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த அதிர்ச்சி சம்பவம் தங்காலையில் இடம்பெற்றுள்ளது .ரன்த என்னும் பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே கர்ப்பம் தரித்துள்ளார்.

குறித்த மாணவி பாடசாலை வகுப்பறையில் கல்விகற்றுக்கொண்டிருந்த போது திடீர் என்று சுகயீனமடைந்துள்ளார்.மாணவி சுகயீனம் அடைந்ததை ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு அறிவித்தனர் .மாணவியின் சித்தி மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மாணவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள் .

மாணவி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை மேற்கொண்டு குழந்தையும் மாணவியையும் வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.இந்த சம்பவத்தினால் மாணவியின் பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் .

இந்த சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் ஹுங்கம பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்ட பொலிஸார் ரன்த காமோதர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த மாணவியின் உடல்நிலை இப்போது தேறி வருவதாகவும் , குழந்தை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.