பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4800 பேரை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கு அண்மையில் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக் கொண்டவர்களை, முதல் கட்டமாக இணைத்துக் கொள்ளப்படுவதற்கு அமைச்சரவை தீர்மானம் செய்துள்ளது.
20ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ளதாக கூறப்பட்டு நேர்காணல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் மிகுதி 15ஆயிரத்து 200 பட்டதாரிகளுக்கு எப்போது நியமனம் வழங்கப்படும்?
பெரும்பான்மையான பட்டதாரிகளை இந்த நியமனம் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.