67 வருடங்களாக கூடாரமொன்றில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்ட்ட பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர் .இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது .
கண்டியில் உள்ள மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் அடைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணை மீட்டெடுத்துள்ளனர் .
இந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட பெண் திருமணமாகாத 75 வயதான முத்துமெனிக்கே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,பெற்றோரிடம் இருந்து பிரித்து 7 வயதில் மாவனெல்ல பிரதேத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டு வேலை செய்ய விடப்பட்டுள்ளார். திருமணமும் செய்து வைக்காமல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. மூடிய அறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த போதிலும், அவரால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.