FIFA உலகக்கிண்ணம் ! இங்கிலாந்தை பூச்சியம் ஆக்கிய பெல்ஜியம்

0

32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ஒரு லீக் போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை செய்தன.

இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிரிவில் முதலிடம் பிடிக்கும்.

இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்காததால்இ ஆட்டம் சமனில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அட்னான் ஜனுசாஜ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி இறுதிவரை கோல் அடிக்காததால்இ பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Leave A Reply

Your email address will not be published.