அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளார்; அயூப் அஸ்மின்!

0

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தை விமர்சித்து கொண்டு, இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு அதே அரசாங்கத்திடம், அதே பாதுகாப்பு அமைச்சிடம், அதே இராணுவத்திடம் அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுள்ளார்.

தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சிற்கு தெரியப்படுத்தி குறித்த கைத்துப்பாக்கி அனுமதியை அவர் பெற்றிருக்கின்றார்.

வெளியில் தமிழ்த் தேசியம் பேசித்திரியும் குறித்த பெண் அமைச்சர் தனது மக்களிடத்திலிருந்து பாதுகாப்புகேட்டு இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சை நாடியுள்ளமை வேடிக்கையாக இருக்கின்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.