ஆபாச வீடியோவில் சிக்கிய குமரி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

0

யூனிபாமில் வாட்ஸ் அப் வீடியோ காலிங்-ல் பெண்ணிடம் சல்லாபித்த கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தவர் பென்சாம். இவரின் இரண்டு ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் நேற்று முதல் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ பத்திரிகையாளர்களின் எண்ணுக்கு முதலில் பரவியது பின்னர் வேறு குழுக்களில் பரவியது. வாட்ஸ்அப் வீடியோவில் பேசும் இன்ஸ்பெக்டர் பென்சாம் யூனிபாமில் நிற்கிறார். எதிர்பக்கம் பேசுவது யார் என தெரியாதவாறும், என்ன பேசுகிறார்கள் என்பது கேட்காத வண்ணமும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

யூனிபாமில் இருக்கும்போதே ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வீடியோ பதிவாகியுள்ளதால் இது காவல் துறை வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. வாட்ஸ்அப் வீடியோ உரையாடல் கருங்கல் காவல் நிலையத்தில் வைத்து நடந்ததாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வீடியோக்கள் வெளியான நிலையில் கருங்கல் இன்ஸ்பெக்டர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கர் சஸ்பெண்ட் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.