இங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்

0

இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND @RishabPant777

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்
இங்கிலாந்து – இந்தியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.

18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.

Leave A Reply

Your email address will not be published.