இன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்? It’s “83 GENOCIDE”?

0

It’s “83 GENOCIDE”
NOT “83 Riots”

அன்பான மக்களே இன்னுமா நாம் அதை “இனக்கலவரம்” என சொல்லிக் கொள்வது?

வெவ்வேறு இனங்கள் தமக்குள் அடித்து கொள்வதுதான் இனக்கலவரம்.

எந்த தமிழரும் எந்த சிங்களவரினதும் முடியைக் கூட புடுங்க முடியாத அளவுக்கு மிகவும் வேகமாகவும் கவனமாகவும் அரங்கேற்றப்பட்டதுதான்…

83 ஜூலை இனவழிப்பு.

ஆம். அது அப்பட்டமான இனவழிப்பு.

13 ஆமிக்காரர்கள் திண்ணைவேலித் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கான சிங்கள மக்களின் எதிர்வினை எனக் கம்பு சுத்துகிறார்கள்.

அது பொய்!

குட்டிமணி உள்ளிட்ட எமது போராளிகளை சிறையில் வைத்து கொல்வதற்கான திட்டம் ஏற்கனவே போடப்பட்டது.

காகம் இருக்க பனங்காய் விழுந்த கதைதான் திண்ணைவேலித் தாக்குதலுக்கும் 83 இறவழிப்புக்கும் போடப்படும் முடிச்சு.

அது சிங்களக் காடையர்களினதும் சேரிப்புற சிங்களப் பாமர்களினதும் வேலை என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் சிங்கள, தமிழ் விசுவாசிகளும்.

அது திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் என்பதை மறவாதீர்கள்.

இதன் சூத்திரதாரிகள் ஐக்கிய தேசியக் கட்சி என்பதையும் மறவாதீர்கள்.

அவர்களுடைய கைகளில் படிந்த
இரத்தக்கறையும் வாய்களில் இருந்து வடியும் எமது உறவுகளின் உதிரமும் இன்னமும் காயவும் இல்லை, அவர்களின் இரத்தவெறி அடங்கவும் இல்லை என்பதை மறவாதீர்கள்.

எனவே தயவுசெய்து இனிமேலும் அதை
இனக்கலவரம் எனச் சொல்லாதிருப்போம்.

83 இனவழிப்பு!

எனத் துணிந்து சொல்லுங்கள்!

Leave A Reply

Your email address will not be published.