இலங்கை காவாலி விமானப்படையின் நவாலி தேவாலய படுகொலை நாள் இன்று ! மீளும் நினைவுகள்

0

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் விமானப்படைக்கு சொந்தமான புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை.

உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள் வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் “முன்னேறிப் பாய்தல்” எனும் பெயர் கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு வலுச்சேர்க்கும் பொருட்டே இவ் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

காரைநகர், மாதகல், சேந்தாங்குளம், அளவெட்டி வடக்கு, ஆகிய பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
 கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர்.

இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் சிறீலங்கா விமானப்படைக்கு சொந்தமான புக்காரா விமானங்கள் இக் கொடூரக் குண்டுவீச்சுத் தாக்குதலை நடாத்தின.

இலங்கை அரசாங்கம் அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது.

இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 127 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது. 
உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடிதுடித்துக் கிடந்தனர்.

இதில் இடம்பெயர்ந்த்உ வந்து அவதிப்பட்ட மக்களூக்கு தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்திலேயே துடித்து இறந்தார்கள். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. ஆலய சுற்றாடல் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் பரந்து கிடந்தது.

சிங்கள பெளத்த பேரினவாதிகள் தமிழருக்கான உரிமையையோ, சுதந்திர வாழ்வையோ என்றும் தரப்போவதில்லை என்ற உண்மை நிலைஅயை ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.

நவாலிப்படுகொலையில் உயிர் நீத்த மக்களை ஈழத் தமிழ் மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.