7. 7. 2018 யாழ் – நாவலர் மண்டபத்தில் இன்று சிறப்பாக நிகழ்ந்தேறியது. மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளர் அ. யேசுராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவை தூண்டி இலக்கிய வட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தி. செல்வமனோகரன் அவர்களின் வெளியீட்டுரையை அடுத்து, தாயகம் நோக்கிய பயணம் ( Exodus ) மொழிபெயர்ப்பாளர் வி. பி. யோசெப் அவர்கள் வெளியிட, மரியாதைக்குரிய அருட்பணி இரவிச்சந்திரன் இமானுவல் அவர்கள் நாவலின் சிறப்புப் படியினைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மதிப்பீட்டுரைகளை ஆசிரியர் ந. குகபரன் மற்றும் கவிஞர் கை. சரவணன் ஆகியோர் வழங்கினர்.
மோகனரூபனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. மனதிற்கு இதமளிக்கும்வகையில், பல்வேறு வேலைப்பளுக்களின் மத்தியிலும் நேரம் ஒதுக்கி கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சம்நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளையில் நிகழ்வு பற்றிய செய்தியை முகநூல் , இணையத்தளம், நாளிதழ்கள் என்பவற்றினூடாக வெளியிட்டவர்களுக்கும் என்நன்றியை பகர்கின்றேன். ஒளிப்படங்கள் : றமணன் கீரன். -ஆதிலட்சுமி சிவகுமார்