ஈழத்தில் தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படத்தை எடுப்பது என்பது மிகவும் சிக்கலான விடயம். இத்தகைய சூழலில் தனித்துவமாக, ஈழ சினிமாவுக்குரிய மரபின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது உம்மாண்டி திரைப்படம். உம்மாண்டிக்கு கைகொடுப்பது ஈழ சினிமாமீது அக்கறையுள்ள நண்பர்களது கடமை மாத்திரமல்ல ஈழ மண்மீதும் ஈழப் பண்பாடு மீதும் அக்கறையுள்ளவர்களின் பொறுப்புமாகும்.
-ஆசிரியர்
உம்மாண்டி இயக்குனர் மதிசுதாவின் முகப்புத்தக பதிவை இங்கே தருகிறோம்
ஒலிச் சீர் செய்கை செய்யப்பட்ட உம்மாண்டி திரைப்படத்துக்காக காத்திருந்த என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த ஆண்டு ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்த எமது உம்மாண்டி திரைப்படம் அதன் பின் ஏற்பட்ட விநியோகச் சிக்கல்களால் திரையிடல் தாமதமாகிக் கொண்டிருந்தது. அத்துடன் பலரால் முன் வைக்கப்பட்ட ஒலித் தெளிவின்மையைக் கருத்தில் கொண்டு முக்கிய பாத்திரங்களின் குரல் பதிவு மீளச் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது.
ஆகஸ்ட் மாதம் (அடுத்த மாதம்) 4 ம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு உடுப்பிட்டியில் உள்ள நிமலேந்திரா திரையரங்கிலும், மறு நாள் 5 ம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு பருத்தித்துறையில் உள்ள S.S திரையரங்கிலும் திரையிடப்படுகிறது.
தயாரிப்பாளரின் சுய விநியோகம் என்பதால் திரையரங்கு வாடகைக்கு பெறப்பட்டே திரையிடப்படுவதால் குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் என்பதை அன்போடு கூறிக் கொள்கிறேன்.
தயவு செய்து இத்தகவலை தங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். என்றோ ஒரு நாள் எங்கள் சினிமாவை நாங்கள் கண்டடைவோம். அதுவரை மக்களுக்கு எம் படைப்புக்களைக் கொண்டு செல்வதற்காக எங்களோடு உழையுங்கள் என அன்பு கலந்த உரிமையோடு வேண்டி நிற்கிறேன்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா