எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகும் சாயிஷா

0

கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களை தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தில் நடிக்க இருக்கிறார் சாயிஷா. #Sayyeshaa

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார். சில காரணங்களால் அந்தப் படத்தை எடுக்க முடியாமல் போனது.

இந்நிலையில் அந்தப் படத்தை தற்போது அனிமே‌ஷனில் உருவாக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கின. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இரண்டாவது ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். அதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு அவரது உருவத்தை கிராபிக்ஸ் செய்து படத்தில் நடிக்கவைத்துள்ளனர்.

சாயிஷா நடிப்பில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.