எரிபொருட்களின் விலை அதிகரிப்பு ! முழு விபரம் இணைப்பு

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்ததையடுத்து லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்பிற்கு அமைய,
137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 145 ரூபாவாகியுள்ளது.

148 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா அதிகரிப்புடன் 155 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 118 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 129 ரூபாவாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேநேரம், லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்புக்கு அமைய, Lanka Auto Diesel லீற்றர் ஒன்றின் புதிய விலை 118 ரூபாவாகவும், Xtra MILE லீற்றர் ஒன்றின் புதிய விலை 122 ரூபாவாகவும்,Lanka Super Diesel (Euro 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 129 ரூபாவாகவும், Lanka Petrol 92 Octane லீற்றர் ஒன்றின் புதிய விலை 146 ரூபாவாகவும் காணப்படுகின்றது .,

Xtra Premium (EURO3) லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாவாகவும், Xtra Premium 95 (EURO 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 158 ரூபாவாகவும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.