`ஐபிஎல் போட்டியில் விளையாடி காயம்’ – முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதித்த பிசிபி!

0

ஐபிஎல் போன்ற வெளிநாட்டு ப்ரீமியர் போட்டிகளில் விளையாட வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான். இவர் கடந்த சில சீசன்களாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். கடந்த சீசனில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது இவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்தில் முழுமையாக மீளாத இவரால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியில் இவரால் இடம்பெற முடியவில்லை. இந்த தொடரை வங்கதேச அணி 0 -2 என்ற கணக்கில் கோப்பையை நழுவவிட்டது.

இதற்கு முஸ்தாபிஜூர் அணியில் இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பலரும் நாட்டுக்காக விளையாடாமல், பிரிமியர் போட்டிகளில் விளையாடுகிறார் என வசைபாட தொடங்கினர். இதனால் விமர்சனங்கள் எழவே, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு பிரிமியர் தொடர்களில் பங்கேற்க முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பிசிபி முடிவு செய்துள்ளது.

இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் கூறுகையில், “வெளிநாட்டு பிரிமியர் தொடரில் விளையாடி காயம் அடைந்ததுள்ளார் முஸ்தாபிஜூர் ரகுமான். இதனால் அவர் சொந்த நாட்டுக்காக விளையாட முடியாமல் போனதை ஏற்க முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.