ஐஸ்வர்யாராயுடன் கருத்து வேறுபாடா? அபிஷேக் பச்சன் விளக்கம்

0

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்த அபிஷேக் தவறான தகவலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். #AbhishekBachchan #AishwaryaRai

ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2007-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. ஐஸ்வர்யாராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று அடிக்கடி தகவல் பரவி வந்தது. அபிஷேக்பச்சன் தாய் ஜெயபாதுரிக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடப்பதாகவும் கூறப்பட்டது. அபிஷேக் பச்சன் சகோதரி சுவேதாவுக்கும், ஐஸ்வர்யாராயை பிடிக்கவில்லை என்றும் பேசப்பட்டது.

திருமணத்துக்கு பிறகும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் சண்டை காரணமாக மும்பையில் ரூ.21 கோடியில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் தகவல் வந்தது.

இந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோவும் வெளியானது.

இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ள அபிஷேக்பச்சன், ‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai

Leave A Reply

Your email address will not be published.