கருணாநிதி நலம் பெற வாழ்த்து தெரிவித்த மைத்திரி ! நேரில் சென்று நலம் விசாரித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

சுகயீனம் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியை நலம் பெற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்தியுள்ளார்.

இன்று அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், கருணாநிதி உடல்நலம் பெற வேண்டுமென வாழ்த்து தெரிவித்து இலங்கை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதியிருந்த கடிதத்தையும் அவர்கள் திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கையளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.