கருணா பிரிந்த போது அலரிமாளிகையில் இருந்து உணவு வழங்கிய முக்கியஸ்தர் தொடர்பில் வெளியான உண்மைகள்
தற்போது இராஜாங்க அமைச்சராகவிருக்கும் அலிஸாஹிர் மௌலானா ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படுகின்ற கருணா அம்மானை கொழும்பிற்கு அழைத்து வந்து ஜெய் ஹில்ட்டனில் தங்க வைத்து அலரி மாளிகையில் இருந்து கருணாவிற்கு உணவளித்தவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரித்தெடுத்தமை மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.