40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த ஆரூரன் அருநதி இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இவர் அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வைத்து இந்த சாதனையை நிலைநாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கொழும்பு பிரபல வைத்தியர் டாக்டர் அனுஷ்யந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
30 வருட கால யுத்தத்தில் தமிழர்கள் பல்வேறு வடுக்களையும் வலிகளையும் பெற்றிருந்தாலும் தளராத மனதுடன் அனைத்து துறைகளிலும் இன்று வரை சாதித்து வருவது பாராட்டுதற்குரியது .