கறுப்பு ஜூலை- யாழ்.பல்கலைக்கழத்தில் நினைவேந்தல்!!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழக மாணவர்களுடன் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அன்று தமிழர்கள் பட்ட துன்பத்தை ஆவணப்படம் ஒன்றின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மாணவர் ஒன்றியம் காண்பித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.