காணாமற் போனோரின் உறவிறனர்கள் நல்லூரில் திலீபனை அஞ்சலித்து உண்ணாவிரதம்!

0

காணாமற் போனோரின் உறவிறனர்கள் நல்லூரில் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வவுனியா காணாமலாக்கப்படோர் சங்கத்தினால் வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தின் ஐநூறாவது நாளை முன்னிட்டு இன்று யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடைபெறுகிறது.

நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் நனைபெறுகின்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூரிலுள்ள திலீபனின் தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நல்லூர்க்கந்தனுக்கு 108 தேங்காய் உடைத்தும் 50 தீச்சட்டி எடுத்தும் வழிபாடு களில் ஈடுபடவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.