தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி, தன்னுடைய சொந்த ஊர் கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடியிருக்கிறார். #Soori
இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.
‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.
மேலும் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்னும் பல படங்களில் இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தன்னுடைய சொந்த ஊரின் கோவில் திருவிழாவில் கலந்துக் கொண்ட சூரி, சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம் ஆடியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்.
என் சொந்த ஊர் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம் pic.twitter.com/s8gXTK6GOz
— Actor Soori (@sooriofficial) July 27, 2018