பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சினிமா பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்வதாக மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார். #NoConfidenceMotion #RahulHugsModi
சினிமா பாணியில் ராகுல் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் – பெண் மந்திரி தாக்கு
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசி பின்னர் மோடியை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.
அவரது செயலுக்கு மத்திய பெண் மந்திரியான ஹர்சிம்ரத் கவுர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெறும் இடம் பாராளுமன்றம், இது ஒன்றும் திரையரங்கம் அல்ல. முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் ஹீரோ, போல் ராகுல் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று எதிர்க்கட்சியாளர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அவர்களைப் பார்த்து நான் ஒன்று கேட்கிறேன்
ராகுல் அவர்களே பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னர் எந்த போதை வஸ்துவை சாப்பிட்டு விட்டு வந்து பேசுகிறீர்கள்.
இவ்வாறு அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.
மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பா.ஜனதா கூட்டணியான அகாலிதளம் கட்சியைச் சேர்ந்தவர். பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியான பிரகாஷ் சிங் பாதலின் மருமகள் ஆவார்.
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும் போது தனது பேச்சை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் ரசித்து சிரிப்பதாக குறிப்பிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இவ்வாறு ஹர்சிம்ரத் கவுர் பேசியிருக்கிறார். #NoConfidenceMotion #RahulHugsModi