சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்! வீடியோ இணைப்பு

0

சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 17 பேரையும் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கினர்.

சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்
சென்னை:

சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள், காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என பலரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தி 17 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட் வளாகத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் போலீசார் அழைத்து வரும் போது, ஆத்திரமடைந்த பல வழக்கறிஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமியை பாலியியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்களை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அடித்து உதைத்த வழக்கறிஞர்கள்…வெல்டன்.

Slået op af ரகுநந்தன் வசந்தன் i Tirsdag den 17. juli 2018

Leave A Reply

Your email address will not be published.