சொகுசு காரில் வந்த பணக்கார தம்பதியினரின் கேவலமான செயல் ! காட்டிக்கொடுத்த சிசிடிவி ! காணொளி இணைப்பு

0

கொழும்பு புறக்கோட்டையில் வீடு ஒன்றுக்கு அருகில் சொகுசு காரில் சென்று குப்பை போட்ட தம்பதியினர் சமூக வலைத்தளங்களில் கடும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இரவு நேரத்தில் சொகுசு காரில் வந்த தம்பதியினர் வீடு ஒன்றின் மதிலுக்கு அருகில் குப்பையை வைத்து விட்டுச் சென்றுள்ளனர். எனினும் குப்பையை வைத்துச் சென்ற காட்சி அந்த வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த தம்பதியினர் செயலுக்கு பாடம் கற்பிப்பதற்கு வீட்டின் உரிமையாளர் தீர்மானித்துள்ளார்.அதற்கமைய சிசிடிவி காணொளியை பயன்படுத்தி தம்பதியின் புகைப்படத்தை எடுத்து, இதனை மதில் மேல் ஒட்டியதுடன், இந்த குப்பையின் உரிமையாளர்கள் இவர்கள் என எழுதி காட்சிப்படுத்தியுள்ளார்.அத்துடன் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குறித்த தம்பதியை அவமானப்படுத்தியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.