ஜூலை 27: புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்!

0

விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

1975 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவே புலிகளின் முதல் ஆயுத தாக்குதல் என்றும் கருதப்பட்டது. யாழ் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு அல்பிரட் துரையப்பாவே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.