டைடியர் டெஸ்சாம்ப்ஸின் பேட்டியை இடைமறித்து வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் வீரர்கள்

0

பிரான்ஸ் அணி பயிற்சியாளர் டைடியர் டெஸ்சாம்ப்ஸின் பேட்டியை இடைமறித்து வீரர்கள் சாம்ப்பைன் தெளித்து வெற்றியை கொண்டாடினார்கள். #WorldCup2018

டைடியர் டெஸ்சாம்ப்ஸின் பேட்டியை இடைமறித்து வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் வீரர்கள்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரான்ஸ் 4-2 என வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியை பிரான்ஸ் வீரர்கள் விமர்சியாக கொண்டினார்கள். மைதானம், வீரர்களை அறையைத் தாண்டி பேட்டிக் கொடுக்கும் இடம்வரை சென்றது. போட்டி முடிந்து பிரான்ஸ் பயிற்சியாளர் டைடியர் டெஸ்சாம்ப்ஸ் பத்திரிகையாளர்களை சந்திக்க தயாரானார்.

அப்போது அந்த இடத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் வீரர்கள் சாம்ப்பைன் மற்றும் ஸ்ப்ரே தெளித்து பயிற்சியாளரை சந்தோசப்படுத்தினார்கள். அப்போது சிறிது நேரம் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. #Deschamps #didierDeschamps #Pogba #mbappe

Leave A Reply

Your email address will not be published.