தடைகளை உடைத்து கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் கரும்புலிகள் நாள் அஞ்சலி!!

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜீலை 5 கரும்புலி நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

மில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நனைவுகூரல் இடம்பெற்றிருந்த்து.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது மாவீர்ர் ஒருவரின் உறவினர் தீபச் சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்தவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளின் முதற் கரும்புலியாக கப்டன் மில்லர் வீரச்சாவடைந்திருந்தார்.அவரின் நினவை அனுஸ்டிக்கும் வகையில் புலிகளினால் கரும்புலி நாள் நினைவு கூரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.