அடம்பிடித்து தேர் வடம் பிடித்த சிங்கள இராணுவத்தினர் ! தடம் மாறும் யாழ்ப்பாணம்! படங்கள் உள்ளே

0

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது.

இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ட பக்தர்கள் செய்வதறியாது இருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, குறித்த ஆலயத்தில் வருடாந்த தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற போது, அங்கு வருகைத்தரும் இராணுவத்தினர் தேர் இழுக்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும் .

யாழ்ப்பாணம் வடமராட்சி வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் அண்மையில் JCB இயந்திரத்தை பயன்படுத்தி தேர் இழுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம் .கீழ் சாதி பிரிவினர்கள் என்று ஒதுக்கப்பட்ட சமூகத்தினர் தேர் வடம் பிடிப்பதை தடுத்து JCB இயந்திரத்தின் மூலம் அந்த ஆலயத்தில் தேர் இழுக்கப்பட்டது .எம் இனத்தை சேர்ந்த எமது மக்கள் தேர் இழுப்பதை தடுத்த கேவலமான செயல் ஒருபுறம் இருக்க எம்மை கொன்றொழித்த , போர்க்குற்றம் புரிந்த, எமது ஆலயங்களை விமான குண்டுகள் மூலம் அழித்த சிங்கள காவாலி இராணுவம் எமது மண்ணில் எமது ஆலயத்தில் தேர் வடம் பிடிப்பது எந்த வகையில் நியாயம் ?இது தொடர்பில் குறித்த ஆலயத்தின் நிர்வாகம் பொறுப்பு கூறியே ஆகவேண்டும் .

Leave A Reply

Your email address will not be published.