நடுரோட்டில் நிர்க்கதியாக நின்றவரைத் தேடி வந்த 200 வேலை வாய்ப்புகள்

0

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த இளைஞருக்கு 200க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன.

அமெரிக்காவில் வீடில்லாமல் தவிக்கும் ஹங்கேரியைச் சேர்ந்த இளைஞர் டேவிட் கசாரெஸ். 27 வயதான இவர் தங்குவதற்கு வீடில்லாமல் வேலையும் இல்லாமல் நிர்கதியாக இருந்திருக்கிறார்.

கடந்த 27ஆம் தேதி இவர் கலிஃபோர்னியாவின் பரபரப்பான சாலை ஓரத்தில்இ வீடில்லாமல் தவிக்கும் தனக்கு வேலை கொடுங்கள் என்று கேட்கும் பதாகையுடன் நின்றிருக்கிறார். அப்பகுதியில் சென்றவர்கள் அனைவரிடமும் தனது சுயவிவரத்தையும் வழங்கியுள்ளார்.

டேவிட் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தனர். இதன் பயனாக அவருக்கு 200 க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தேடி வந்து குவிந்துள்ளன. குறிப்பாக கூகுள், பிட்காயின் போன்ற பிரபல நிறுவனங்கள் முதல் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அவருக்கு வேலை கொடுக்க தயாராக உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.