போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், மரண தண்டனையைள நிறைவேற்றும் “அலுகோசு” பணியை இலவசமாக செய்வதற்கு தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71வயது எல்.பி.கருணாவதி என்ற பெண்ணே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் காரர்கள், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை கொண்டுவந்து இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை இல்லாது செய்வதாகவும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.